இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாடு அமெரிக்காவின் டெல்வாரே நகரில் உள்ள வில்மிங்டனில் நடைபெறுகிறது.
குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
பிலடெல்பியா விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டதுடன் இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
இதனிடையே பிரதமர் மோடி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனையும் சந்தித்தார்.
இந்தியா உடனான அமெரிக்காவின் உறவு வலுவானதாக உள்ளதென ஜோ பைடன் தெரிவித்தார்.
“இருவரும் ஒவ்வொரு முறையும் சந்திக்கும் போதும் புதிய விவகாரத்தில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து கண்டறிகிறோம்.
இன்றும் அதில் எந்த மாற்றமும் இல்லை“ என அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.