மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று (19) தம்புள்ளையில் ஆரம்பமாகவுள்ளது.
இரண்டு போட்டிகள் இன்று நடைபெறவுள்ள நிலையில், அனைத்து போட்டிகளையும் இரசிகர்கள் இலவசமாக பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி, நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு இராஜியம் இடையிலான போட்டி பிற்பகல் 2 மணிக்கும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இரவு 7 மணிக்கும் நடைபெறவுள்ளது.
2004ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி 2008ஆம் ஆண்டு வரை ஒரு நாள் போட்டியாக நடத்தப்பட்டு, 2012ஆம் ஆண்டு முதல் டி20 போட்டியாக மாற்றப்பட்டது.
எட்டு அணிகள் பங்கேற்கும் இந்த ஆண்டுக்கான மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி தம்புள்ளை மைதானத்தில் இலங்கையால் நடத்தப்படுகிறது.
இன்று முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஐக்கிய அரபு இராஜியம் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
அதேபோன்று, பி பிரிவில் இலங்கை, பங்களாதேஷ், மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.