தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு உலகம் முழுவதும் பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக விமான சேவைகள் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட முக்கிய துறைகள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, அவுஸ்திரேலியாவின் விமான நிலையங்களில் தொழில்நுட்ப சிக்கல்கள் பதிவாகியுள்ளதுடன், பல விமான சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் தமது அவசர சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், இலண்டன் பங்குச் சந்தையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இலங்கையில் உள்ள பல தனியார் நிறுவனங்களின் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் நடவடிக்கைக்கான ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், தொழில்நுட்ப கோளாறுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
இந்த நிலையை மீட்டெடுப்பதில் சில சிரமங்கள் இருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.