இன்றைய ராசிபலன் 13.07.2024

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். எதிர்பார்த்ததை விட வருமானம் அதிகரிக்கும். தொழிலில் புதிய முதலீடு செய்யலாம். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த கோர்ட் கேஸ் வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். பிரச்சனைகள் தீரக்கூடிய நாள் இது. சந்தோஷம் பெருக்கக் கூடிய நாளாக அமையும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கும். இன்றைய நாளில் வாரா கடன் வசூல் செய்து மன நிம்மதியை பெறுவீர்கள். சுபகாரிய நிகழ்ச்சிகளை பற்றிய பேச்சுகள் வீட்டில் தொடங்கும். காதல் கைகூடும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிரிகளை கூட நண்பர்களாக மாற்றிக் கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் இன்று பொறுமையாக உங்களுடைய வேலையை தொடங்குவீர்கள். எதிலும் அவசரப்பட மாட்டீர்கள். சில பேருக்கு சொன்ன வார்த்தை காப்பாற்ற முடியாத சூழ்நிலை உண்டாகும். தலைகுனிவு ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் அனுசரணை தேவை. முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுக்கு தெரிந்தவர்களே, உங்களுடைய முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடுவார்கள். நண்பர்கள் உறவுகளோடு வாக்குவாதம் வர வாய்ப்புகள் உள்ளது. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். முதலீட்டில் கவனம் இருக்க வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உஷாராக இருங்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. மனசு சந்தோஷமடையும். நீண்ட நாள் பகை நீங்கும். குடும்பத்தோடு கோவில் குலங்களுக்கு சென்று நேரத்தை செலவழிப்பீர்கள். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். விவசாயம் தொழில் செய்பவர்களுக்கு நல்லது நடக்கும். ஆரோக்கியத்தில் சின்ன சின்ன பின்னடைவு இருக்கும். உடல் உபாதைகள் இருந்தால் மருத்துவரை அணுகவும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் செய்யும் வேலையை சுற்றி இருப்பவர்கள் பாராட்டிக் கொண்டே இருப்பார்கள். இதனாலேயே உங்களுடைய மனதில் எந்த ஒரு சோர்வும் ஏற்படாது. வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு இடமாற்றமும் சில பேருக்கு வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. செலவை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் நல்லது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கோபமே வராது. ஆனால் உங்களை கோபப்படுத்தும் வகையில் நாலு பேர் செயல்படுவார்கள். நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும். புதிய மனிதர்களின் சந்திப்பு லாபத்தை கொடுக்கும். கலைஞர்களுக்கு இன்று முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் சின்ன சின்ன சிக்கல்கள் வரலாம். இருந்தாலும் உங்களுடைய திறமையால் அதை எல்லாம் சரி செய்து விடுவீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் இன்று அலுவலகப் பணியில் கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய பொறுப்பை அடுத்தவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். உங்களுடைய உடமைகளை நீங்களே பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். பேருந்தில் செல்பவர்கள், ஷேர் ஆட்டோவில் செல்பவர்கள் பர்சை பத்திரமாக வைத்துக் கொள்ளவும். எந்த ஒரு பொருளும் இலவசமாக கிடைக்குது என்ற பேராசை படாதீங்க. இன்று பண விஷயத்தில் நஷ்டம் அடைய வாய்ப்புகள் இருக்கிறது ‌

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று உயர்வு நிறைந்த நாளாக இருக்கும். நாலு பேர் பாராட்டும் வகையில் உங்களுடைய நடவடிக்கை இருக்கும். அடுத்தவர்களுக்கு கேட்காமலேயே உதவி செய்வீர்கள். இதனால் மன நிம்மதி அடைவீர்கள். நீண்ட நாள் சொத்து பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும். மன நிம்மதி பெறுவீர்கள். வீட்டில் சுபகாரிய தடை விளக்கும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று அறிவாற்றல் நிறைந்த நாளாக இருக்கும். எல்லா விஷயத்திலும் சிந்தித்து செயல்படுவீர்கள். யாராலும் முடிக்க முடியாத கஷ்டமான வேலையை கூட நீங்க போன போக்கில் முடித்துவிடுவீர்கள். உங்களுடைய அறிவுத்திறனை உங்களாலேயே நம்ப முடியாது. தொழிலிலும் வேலையிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். மனைவியை சமாளிப்பதில் சில சிக்கல்கள் இருக்கும். ஜாக்கிரதை, பொய் சொல்லி பிரச்சினையிலிருந்து தப்பிக்க பாக்காதீங்க. உண்மையை பேசுங்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று புகழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். உங்களை நிரூபிப்பதற்காக அயராது உழைப்பீர்கள். நல்ல முன்னேற்ற பாதைக்கு உண்டான விதையை போடுவீர்கள். தொழிலில் அகல கால் வைக்க வேண்டாம். எதுவாக இருந்தாலும் அனுபவ சாலிகளை கேட்டு முடிவு எடுக்க வேண்டும். அதிக வட்டிக்கு கடன் வாங்காதீங்க பின்னால் சிக்கல் வர வாய்ப்பு உள்ளது.

மீனம்

மீன ராசிக்காரர்கள் இன்று நல்ல செயல்களை செய்வீர்கள். மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நடந்து கொள்வீர்கள். வாழ்க்கை என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளும் அளவுக்கு நிறைய அனுபவங்கள் கிடைக்கும். நிதி நிலைமை சீராகும். கடன் பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள். உங்களுடைய வாழ்க்கை துணை எல்லா பிரச்சனைக்கும் தீர்வாக இருப்பார்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.

Recommended For You

About the Author: admin