ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிலையமானது, அதிவேக இணைய வசதியை வழங்குவதற்காக ஸ்டார்லிங்க் என்ற பெயரில் செயற்கைக்கோள்களை அனுப்பி பூமியின் குறைந்த சுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்தி உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை பால்கன் – 9 ரொக்கெட் மூலம் சுமார் 20 செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக பூமியின் குறைந்த சுற்றுவட்டப் பாதைக்கு கொண்டு செல்லப்பட்டன.
ஆனால், ரொக்கெட்டில் ஏற்பட்ட சில தொழில்நுட்ப கோளாறுகளின் காரணமாக திட்டமிட்ட புள்ளியில் செயற்கை கோள்களை விடுவிக்காமல் குறைந்த தொலைவில் விடுவித்தது.
இதுதொடர்பில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அதன் எக்ஸ் தளத்தில், ‘பால்கன் – 9 ரொக்கெட்டின் இரண்டாவது நிலை இயந்திரம் அதன் உந்து விசை பணியை சரியாக நிறைவேற்றாத காரணத்தாலேயே திட்டமிடப்பட்ட புள்ளியில் செயற்கைக் கோளை நிலைநிறுத்த முடியவில்லை’ எனப் பதிவிட்டுள்ளது.
வேகமான இணைய வசதி கிடைக்காத இடங்களுக்கு இணைய சேவை வழங்குவதே ஸ்டார்லிங்கின் முக்கிய குறிக்கோளாகும்.