திடீரென வெடித்துச் சிதறிய ரஷ்ய செயற்கைக்கோள்

ரஷ்ய செயற்கைக் கோள் ஒன்று விண்வெளியில் செயலிழந்த நிலையில் இருந்தது. அந்த செயற்கைக் கோள் சுக்குநூறாக வெடித்துச் சிதறிமையினால் சர்வதேச ஆய்வு நிலையத்திலுள்ள விஞ்ஞானிகள் பாதுகாப்பு அறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பில், அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா அதிகாரிகள் கூறியதாவது,

“கடந்த 2022ஆம் ஆண்டு ரஷ்யாவில் செயலிழந்த செயற்கைக்கோள் ஒன்று திடீரென உடைத்து நொறுங்கியது. நொறுங்கிய செயற்கைகோளிலிருந்து வெளிவந்த நூற்றுக்கும் அதிகமான துகள்கள் ரேடாரின் கண்களுக்குத் தெரிந்தன.

குறித்த செயற்கைக் கோள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அருகில் வெடித்ததால் அதிலிருந்து வெளிவந்த துகள்கள் குறித்த விண்வெளி நிலையத்தை தாக்கக்கூடும் என்று அதிலிருந்த விஞ்ஞானிகள் பாதுகாப்பு அறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அதில் எதுவித ஆபத்தும் இல்லை என தெரிந்ததும் விஞ்ஞானிகள் அவர்கள் பணியைத் தொடர்ந்துள்ளனர்.

குறித்த செயற்கைக்கோள் என்ன காரணத்துக்காக திடீரென வெடித்துச் சிதறியது என்பது குறித்து தெரியவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Recommended For You

About the Author: admin