தமிழ் பொது வேட்பாளர் பயனற்றது: அமைச்சர் டக்ளஸ்

தமிழ் பொது வேட்பாளர் முயற்சி தமிழ் மக்களுக்கு பயனற்றது மாத்திரமின்றி பாதிப்பை ஏற்படுத்தும் என ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தமிழ் பொது வேட்பாளர் என்பது அவசியமில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது குறித்து கருத்துக்கள் வெளியாவதுடன் அதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழ் மக்களுக்கு நீண்ட காலமாக காணப்படுகின்ற பிரச்சனைகள் தீர்வு கிடைக்காமல் இருப்பதற்கான முயற்சியாகவே நான் இதைனைப் பார்க்கிறேன்.

இவர்களை உருளைக் கிழங்கு மூட்டையில் கட்டி வைத்திருந்தது போன்று ஒன்றாக கட்டி வைத்திருந்தாலும் பிரபாகரன் இல்லாத சூழலில் கட்டவிழ்த்துள்ளதால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசைக்கு உருண்டோடியது போன்று சிதறுப்பட்டு இருக்கின்றனர்.

இவர்களைப் போன்று அல்லாமல் கடந்த காலங்களில் நாம் மக்களுக்கு எதை கூறினோமே அதனையே இப்போதும் கூறுகிறோம். சொல்வதை செய்வதும் செய்வதை சொல்வதும் தான் நான்” என அமைச்சர் கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: admin