பதவி காலத்தை நீடிக்க ரணில் திட்டம்?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்திற்கு வந்தால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதற்கு ஆதரவளிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றிடம் இதனை தெரிவித்துள்ளார்.

கொள்கை ரீதியாக தேர்தலை ஒத்திவைப்பதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்ப்பதாகவும், எனவே பதிவி நீடிப்பு தொடர்பான யோசனைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

19வது திருத்தச் சட்டத்தின் கீழ் 05 வருடங்களாக குறைக்கப்பட்ட ஜனாதிபதியின் பதவிக் காலத்தை மீண்டும் 06 வருடங்களாக நீடிக்கத் தயாராகி வருவதாக கூறப்படும் தகவல்களுக்கு பதிலளிக்கும் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

2019ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ச மக்கள் போராட்டத்தல் பதவி விலகியிருந்தார்.

இந்நிலையில், கோட்டாபய ராஜபக்சவின் எஞ்சிய காலத்திற்கு மட்டுமே ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: admin