இந்திய இராணுவத்தின் 30ஆவது தளபதி

இந்திய பிரதமராக நரேந்திர மோடி 3 ஆவது முறையாக பதவியேற்றதன் பின்னர், இந்திய இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது இராணுவத் தளபதியாக செயல்படும் ஜெனரல் மனோஸ் பாண்டேவின் பதவிக்காலம் எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதியுடன் நிறைவுறுகின்ற நிலையில், அன்றைய தினம் புதிய தளபதியாக உபேந்திராவின் பதவியேற்பு நடைபெறும் என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1984ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் காலாற்படையின் 18ஆவது படையணியில் தனது இராணுவ சேவையை ஆரம்பித்த உபேந்திரா, சுமார் 39 ஆண்டுகளாக தனது இராணுவ சேவையை தொடர்ந்து வருகிறார்.

அதுமட்டுமின்றி இந்தியாவின் வட கிழக்குப் பகுதியில் அசாம் ரைபிள்ஸ் படையின் கமாண்டராகவும், இன்ஸ்பெக்டர் ஜெனரலாகவும், ஹிமாச்சலப் பிரதேசத்திலுள்ள இராணுவத் தலைமையகத்தின் துணைத் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.

இந்நிலையில் தற்போது இராணுவத் துணைத் தலைவராக பணியாற்றிவரும் லெப்டினென்ட் ஜெனரல் உபேந்திரா எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதியன்று இந்திய இராணுவத்தின் 30ஆவது தளபதியாக பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin