கல்வி பொது தாராதர சாதாரணத்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியிலிருந்து ஆசிரியர்கள் விலகிக் கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பள முரண்பாடுகளை நீக்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் – அதிபர் கூட்டணியின் தலைமையில் இன்று பிற்பகல் அனைத்து பிராந்திய கல்வி அலுவலகங்கள் முன்பாக முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆசிரியர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல வருடங்களாக நிலவும் சம்பள முரண்பாடுகளை நீக்குவது மட்டுமன்றி, பரீட்சை விடைத்தாள்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், விடைத்தாள் மதிப்பீட்டில் ஆசிரியர்கள் கவனம் செலுத்தி வருவதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த நிபந்தனைகளுக்கு எதிராக இம்மாதம் 26ஆம் திகதி அனைத்து ஆசிரியர்களும் சுகயீன விடுப்பு எடுக்கும் தொழில் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும், அன்றைய தினம் அனைத்து ஆசிரியர்களும் கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.