யாழ் வந்த பிரபல தென்னிந்திய தெய்வீக பாடகி.

அரியாலை நீர்நொச்சித்தாழ்வு சித்தி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இந்தியாவின் பிரபல கர்நாடக இசை பாடகி நித்யஸ்ரீ மகாதேவனின் “தெய்வீக இசை கச்சேரி” இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் இசை நிகழ்வில் பங்கேற்பதற்காக நித்தியஸ்ரீ உள்ளிட்ட குழுவினர் பலாலி விமான நிலையம் ஊடாக  யாழ்ப்பாணம் வருகைதந்தனர்.

யாழ்.வருகைதந்த நிதியஸ்ரீ மகாதேவன் உள்ளிட்ட குழுவினரை பலாலி விமானநிலையத்தில் வைத்து பிரதம கணக்காளர் அகிலன்,குடிவரவு குடியகல்வு அதிகாரி ராஜ்குமார், இசை நிகழ்வின் அனுசரணையாளர் திருமதி நேதாஜி தேன்மொழி, மற்றும் ஜெயந்தி திவாகர் ஆகியோர் வரவேற்றனர்.

Recommended For You

About the Author: admin