முல்லைத்தீவில் இலவச குடி நீர் சற்று முன் வெளியான மகிழ்ச்சி தகவல்..!

முல்லைத்தீவு நகரில் மாமூலை, கணுக்கேணி கிழக்கு, கணுக்கேணி மேற்கு கிராமங்களில் இதுவரை இலவச குடிநீர் இணைப்பைப் பெற்றுக்கொள்ளாத மக்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது எனத் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

மாமூலை, கணுக்கேணி கிழக்கு, கணுக்கேணி மேற்கு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த குடும்பங்களில் இதுவரை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் வழங்கப்பட்ட இலவச குடிநீர் இணைப்பைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் ஜூன் மாதம் 21 ஆம் திகதிக்கு முன்னர் அலுவலத்துடன் தொடர்பு கொண்டு இலவச நீர் இணைப்பைப் பெறுவதற்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறும்,

பதிவுகளுக்காக வருகை தரும் போது தேசிய அடையாள அட்டை, குடும்ப பதிவு அட்டை மற்றும் காணி தொடர்பான ஆவணங்களுடன் தங்களின் விபரங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் முல்லைத்தீவு காரியாலயம் கோரியுள்ளது.

அத்துடன் மேற்படி பிரதேசங்களில் ஏற்கனவே பதிவுகளை மேற்கொண்டு இதுவரை நீர் இணைப்பைப் பெற்றுக் கொள்ளாதவர்களும் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு தங்களின் பதிவுகளை மீள் உறுதி செய்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அத்தோடு ஜூன் மாதம் 21 ஆம் திகதிக்குப் பின்னரான பதிவுகளுக்கு இலவச குடிநீர் இணைப்பு எதிர்வரும் காலங்களில் வழங்கப்பட மாட்டாது என்பதையும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துக் கொள்கிறது.

Recommended For You

About the Author: admin