தொடர் போராட்டத்தில் குதித்த வட மாகாண அரச சாரதிகள்

வட மாகாண அரச சாரதிகள் சங்கம், யாழ் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண பிரதம செயலர் அலுவலகம் முன்பாக பந்தல் அமைத்து தொடர் போராட்டத்தில் இன்று இரண்டாம் நாளாக ஈடுப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் 5 வருடங்களாக தடைப்பட்டிருந்த சாரதிகளுக்கான இடமாற்றத்திற்கு பிரதிப் பிரதம செயலரால், கடந்த வருடம் விண்ணப்பம் கோரப்பட்டு இடமாற்ற பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது.

ஆளுநரின் கோரிக்கை அமைய பின்னர் அந்த இடமாற்றம் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இதனால் ஏமாற்றம் அடைந்த அரசு சாரதிகள் கடந்த பெப்ரவரி மாதத்தில் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்தனர்.

அதனைத் தொடர்ந்து இடை நிறுத்தப்பட்ட இடமாற்றம், ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என பிரதி பிரதமர் செயலர் எழுத்து மூலம் உறுதிமொழி வழங்கி இருந்தார்.

jkiuk

Government Drivers

குறித்த திகதி வரை இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், அரச சாரதிகள் சங்கம் இன்று முதல் 7 ஆம் திகதி வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என அரச சாரதிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

நேற்று காலையில் ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட அரச சாரதிகள் சங்கம், ஆளுநருக்கான மகஜரை அவரின் பிரதிநிதியிடம் கையளித்ததுடன் கைதடியில் அமைந்துள்ள பிரதமர் செயலர் அலுவலகம் முன்பாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: admin