சீனாவை உளவு பார்க்கிறதா பிரித்தானியா?

பிரித்தானியாவைச் சேர்ந்த ‘MI6‘ என்ற உளவுச் சேவையொன்று சீனாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.

இதேவேளை, சீனாவின் மத்திய அரசாங்கத்தில் பணிபுரியும் தம்பதியொன்று பிரித்தானியாவைச் சேர்ந்த M16 என்ற உளவு அமைப்பிற்கு உளவு பார்த்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது குறித்து சீனாவின் உளவு அமைப்பொன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

இருப்பினும் தங்களது உளவுப் பிரிவு பிரித்தானியாவின் குறித்த உளவு நடவடிக்கையை முறியடித்துள்ளது என சீனா தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னரும் பிரித்தானியாவின் M16 உளவு அமைப்பானது சீனாவில் உள்ள வெளிநாட்டவரைப் பயன்படுத்தி உளவு நடவடிக்கையில் ஈடுபட்டதாக சீனாவின் உளவுப் பிரிவினர் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin