விஜய் டிவியின் கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் கதாநாயகியாக நடித்து பின்னர் வெள்ளித்திரையில் கால் பதித்தவர் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்.
இவர் தனுஷ், கார்த்தி, வைபவ், அதர்வா போன்ற ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார்.
அண்மையில் விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார்.

Priya bhavani shankar with boyfriend
இதனிடையே அவ்வப்போது தனது நீண்ட நாள் காதலரான ரத்னவேலுடன் இணைந்திருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவார்.
தற்சமயம் அவரது காதலருடன் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அவர் சுற்றுலாவில் சந்தோஷமாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.

