பிரித்தானியாவில் இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் தனது கட்சி வெற்றிப் பெற்றால் பிரித்தானியாவிற்கு நிகர இடப்பெயர்வை குறைப்பதாக தொழிற்கட்சித் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர் உறுதியளித்துள்ளார்.
பத்திரிகை நிறுவனமொன்றிற்கு ஞாயிற்றுக்கிழமை (02) அவர் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“வேலை சந்தையில் திறன் வெற்றிடங்கங்களை நிரப்புவதற்கும் சுரண்டலுக்கு எதிரான சட்டங்களை வலுப்படுத்தவும் பிரிட்டிஷ் தொழிலாளர்களுக்கு பயிற்சியளிக்க புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
டோரிகள் நிகர இடம்பெயர்வைக் குறைக்கும் தங்கள் வாக்குறுதிகளை மீண்டும் மீண்டும் மீறியுள்ளனர். நான் எங்கள் எல்லைகளைக் கட்டுப்படுத்துவேன் மற்றும் பிரிட்டிஷ் வணிகங்கள் முதலில் பிரித்தானியர்களை வேலைக்கு அமர்த்த உதவுவதை உறுதிசெய்வேன்.
அதாவது, அதிகமான இங்கிலாந்து தொழிலாளர்களுக்கு பயிற்சியளிப்பதன் மூலம் நாடு இடம்பெயர்வதை குறைவாக நம்பியிருக்க வேண்டும்” என்பதே இதன் நோக்கமாக இருக்கும்“, என்று சர் கெய்ர் கூறினார்.
பிரித்தானியாவில் அடுத்த மாதம் 04 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என பிரதமர் ரிஷி சுனக் அறிவித்ததிலிருந்து தேர்தலம் களம் சூடுபிடித்துள்ளது.
கன்சர்வேட்டிவ் மற்றும் தொழிற்கட்சிகளுக்கிடையே கடுமையான போட்டி நிலவுவதுடன் தேர்தல் பிரச்சாரங்களும் தீவிரமடைந்துள்ளன.
“ஒவ்வொரு வாக்குக்கும் போராடுவேன்” என்ற ரிஷி சுனக்கின் அறிவிப்பு கன்சர்வேட்டிவ் கட்சியில் உள்ள பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது போன்று மறுபுறம் “தொழிலாளர் வேட்பாளராக முன்னோக்கிச் செல்வதற்கு டயான் அபோட் தயாராக உள்ளார்” என தொழிற்கட்சித் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர் கூறியதும் அதிர்ச்சித் தகவலாகவே பார்க்கப்பட்டது.