அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனால் நேற்று சனிக்கிழமை வெளியிடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்ததை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆதரித்தால் ஆளும் கூட்டணியை தகர்த்தெறியப்போவதாக இஸ்ரேலின் நிதியமைச்சரும் தேசிய பாதுகாப்பு அமைச்சரும் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
ஹமாஸ் அழிக்கப்படுவதற்கு முன்னர் போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் கடுமையாக எதிர்ப்பதாக நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் மற்றும் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இட்டமர் பென்-கிவிர் ஆகியோரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்தின் 03 கட்டங்களையும் பைடன் வெளிப்படுத்தியிருந்தார். இதற்கு ஹமாஸ் அமைப்பினரும் இணக்கம் தெரிவித்தனர்.
இந்நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நெதன்யாகு ஆதரித்தால் அமைச்சரவையிலிருந்து விலகி, கூட்டணி ஆட்சியை கவிழ்ப்போம் என தீவிர வலதுசாரி அமைச்சர்களான நிதியமைச்சரும் தேசிய பாதுகாப்பு அமைச்சரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நிதியமைச்சர் ஸ்மோட்ரிச் ஓரினச் சேர்க்கையாளர் மற்றும் பாசிச கொள்கையுடையவர் என தன்னைத் தானே அறிவித்துக் கொண்டவர். பாதுகாப்பு அமைச்சரான க்விர் பலஸ்தீனிய வெறுப்பாளரான அவர் இஸ்ரேலிய அரசாங்கத்தில் முக்கிய பதவி வகிக்கின்றார்.
மேற்குக் கரையின் மிகவும் தீவிரமான குடியேற்றங்களில் ஒன்றில் குடியேறிய பென்-க்விர், சட்ட சிக்கல்களின் வரலாற்றைக் கொண்டுள்ளார். இனவாதத்தைத் தூண்டியதற்காகவும், பயங்கரவாத அமைப்பை ஆதரித்ததற்காகவும் தண்டனை பெற்ற அவர், 16 வயதில் மீர் கஹானேவின் சட்டவிரோதமான கச் குழுவில் சேர்ந்தார் எனவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
“ஹமாஸ் முழுமையாக அழிக்கப்பட்டு பணயக்கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படும் வரை நிரந்தர போர் நிறுத்தம் இருக்காது” என்று நெதன்யாகு கூறியதை நிதியமைச்சர் நினைவு கூர்ந்தார்.
“இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் ஹமாஸை அழிப்பதற்கான குறிக்கோளை கைவிட்டு, போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் மற்றும் பயங்கரவாதத்திற்கு வெற்றியாகவும் இஸ்ரேலுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாகவும் அமையும் பொறுப்பற்ற ஒப்பந்தம் ” என ஈடமார் பென்-கவிர் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் போர் நிறுத்த திட்டத்திற்கு நெதன்யாகு ஆதரவு வழங்கினால் அரசாங்கத்தை ஆதரிப்பதாக அந்நாட்டு எதிர்கட்சித் தலைவர் உறுதியளித்துள்ளார்.