சீரற்ற வானிலை – மத்தளைக்கு வழிமாற்றம் செய்யப்பட்ட விமானங்கள்

சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட இருந்த இரண்டு விமானங்கள் மத்தளை ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு வழி மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, சிங்கப்பூரில் இருந்து பயணத்தை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான UL 309 விமானம் மற்றும் எதிஹாட் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான EY 394 விமானம் ஆகியனவே இவ்வாறு வழி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், மத்தளை ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட சிங்கப்பூரில் இருந்து பயணத்தை ஆரம்பித்த UL 309 விமானத்தை மீண்டும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கோள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பில் இருந்து மத்தளைக்கு புதிய பணியாளர்களை ரீலங்கன் ஏர்லைன்ஸ் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்ட ஐந்து மணிநேர தாமதத்தினால் முன்னதாக பணியில் ஈடுபட்டிருந்தவர்களின் பணி நேரம் முடிவடைந்துள்ளதால் இந்த மாற்றீடு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்தளைக்கு வழிமாற்றம் செய்யப்பட்ட விமானம் – வருத்தம் தெரிவிக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

204 பயணிகளுடன் சிங்கப்பூரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த UL 309 விமானம், மத்தளை ராஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு வழி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள பகுதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளித்து விமானத்தை மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிங்கப்பூரில் இருந்து விமானம் புறப்படுவதற்கு ஐந்து மணி நேரம் தாமதகாகியுள்ளது.

இதற்கமைய, குறித்த விமானம் (02) காலை 10.00 மணியளவில் பயணிகளுடன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் நோக்கி புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்ட தாமதம் மற்றும் அதனைத் தொடர்ந்து வழி மாற்றியமைக்கப்பட்டமையினால் ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளது.

அத்துடன், பாதிக்கப்பட்ட பயணிகள் தமது இடங்களை சென்றடைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin