2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக ஒரு ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்தது தொடா்பான விவரங்களை மறைத்த வழக்கில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்கள் விவாதத்திற்குப் பிறகு, 12 உறுப்பினர்களைக் கொண்டநியூயோர்க் நடுவர் மன்றம் டிரம்ப் எதிர்கொண்ட அனைத்து 34 குற்ற வழக்குகளிலும் குற்றவாளி என வியாழனன்று (31) அறிவித்தது.
இதற்கான தண்டனை விபரம் எதிர்வரும் ஜூலை 11 ஆம் திகதி அறிவிக்கப்படும்.
அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஒருவர் குற்றவியல் வழக்கில் தண்டனை பெறுவது இதுவே முதல்முறையாகும்.
எதிர்வரும் நவம்பரில் நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி ட்ரம்பை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க திட்டமிட்டுள்ளள நிலையில் இந்த தீர்ப்பு வந்துள்ளது.