தெற்கு காசா நகரமான ரஃபாவில் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேல் இந்த உத்தரவுக்கு இணங்க வாய்ப்பில்லை என்ற போதிலும், இந்த விடயம் நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காசா மீதான போர் நடவடிக்கையில் இஸ்ரேலின் நடத்தை தொடர்பில் விமர்சங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இஸ்ரேலின் நட்பு நாடான அமெரிக்காவிடமிருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதன்படி, இந்த வாரத்தில் மாத்திரம் மூன்று ஐரோப்பிய நாடுகள் பலஸ்தீன அரசை அங்கிகரிப்பதாக அறிவித்துள்ளன.
அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் நீதிமன்றத்தின் தலைமை சட்டத்தரணி, ஹமாஸ் அதிகாரிகளுடன் சேர்த்து இஸ்ரேலின் தலைமைகளுக்கும் விடியாணை பிறப்பிக்குமாறு கோரியிருந்தார்.
இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் போரை முடிவுக்குக் கொண்டுவர உள்நாட்டில் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.