ஈரான் ஜனாதிபதி உயிரிழப்பு- வெளியான முதல் அறிக்கை

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 09 பேர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தமை தொடர்பான முதலாவது அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடாத்திய நிபுணர் குழுவாலேயே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் பிரகாரம், ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்டோர் பயணித்த ஹெலிகொப்டர், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட விமான மார்க்கத்தை விட்டு விலகிச் செல்லவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், குறித்த ஹெலிகொப்டரின் விமானி, ஏனைய இரண்டு ஹெலிகொப்டர்களுடனும் 90 நிமிடங்கள் தொடர்பை ஏற்படுத்த முயற்சித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஹெலிகொப்டரின் இடிபாடுகளில், துப்பாக்கி ரவைகள் (தோட்டாக்கள்) அல்லது அதனுடன் தொடர்புடைய பொருட்கள் இருந்தமைக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானிய ஆயுதப் படைகளின் பொதுப் பணியாளர்கள் அடங்கிய குழுவினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin