கொரிய மொழிப் பரீட்சையில் 95.6 வீதமானோர் சித்தி

2023 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட கொரிய மொழிப் பரீட்சையில் 95 வீதமான பரீட்சார்த்திகள் சித்தியடைந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் Sri Lanka Bureau Of Foreign Employment (SLBFE) தெரிவித்துள்ளது.

உற்பத்தி மற்றும் மீன்பிடித் துறைகளின் தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் 3422 விண்ணப்பதாரர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

குறித்த பரீட்சைக்கு மொத்தமாக 3580 விண்ணப்பதாரர்கள் தோற்றியிருந்தததுடன் மொத்த பரீட்சார்த்திகளின் எண்ணிக்கையில் 95.6 வீதமான பரீட்சார்த்திகள் சித்தியடைந்துள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

இத்தேர்வின் முடிவுகள் எதிர்வரும் மே மாதம் 27ஆம் திகதி WWW.slbfe.lk என்ற இணையத்தளத்தில் வெளியிடப்படும் எனவும் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கான மருத்துவத் தேர்வுகள் மே 28ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பரீட்சையில் சித்தியடைந்த பரீட்சார்த்திகளுக்கான உரிய நேர்முகத் தேர்வுகள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மாகாண அலுவலகங்கள், குடிவரவு வள மையங்கள் மற்றும் பயிற்சி நிலையங்களில் எதிர்வரும் ஜூன் 06,07 மற்றும் 10ஆம் திகதிகளில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin