தென் கொரிய மே 18 நினைவு அறக்கட்டளையின் 2024ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகளுக்கான குவாங்ஜு பரிசு தமிழ் பெண்கள் உரிமை ஆர்வலர் சுகந்தினி மதியமுதன் தங்கராசுக்கு (Suganthini Mathiyamuthan Thangaras) வழங்கப்பட்டுள்ளது.
‘இராணுவத்திடம் அனைத்தையும் இழந்த ஏராளமான பெண்களுக்கு தைரியம் மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக அவர் நிற்கிறார்’ எனவும் அவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள சுகந்தினி,
இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு வவுனியாவில் உள்ள பிரபல தளமான ஜோசப் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அங்கு தாம் பயங்கரமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக சுகந்தினி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தாம் நிர்வாணப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அதே அறையில் மேலும் 11 பெண்கள் அதேபோன்ற நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக சுகந்தினி கூறியுள்ளதோடு துரதிர்ஷ்டவசமாக அவர்களில் இருவர் இறந்துள்ளனர் என்றும் சுகந்தினி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்நிகழ்வில் யுத்தத்தின்போது உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.