இந்தோனேசியாவின் ஹல்மஹேரா தீவில் உள்ள இபு எரிமலை மீண்டும் வெடித்துள்ளது.
நெருப்பு குழம்புகள் சுமார் 5,000 மீட்டர் உயரத்திற்கு சென்றதாக எரிமலை மற்றும் புவியியல் அபாயக் குறைப்பு மையம் தெரிவித்துள்ளது.
சுமார் 02 நிமிடங்களுக்கு இந்த எரிமலை வெடித்து சிதறி, நெருப்பு குழம்புகள் தென்மேற்கு மற்றும் மேற்கு நோக்கி சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரமும் இபு எரிமலை வெடிப்பு மூன்றிலிருந்து நான்காம் நிலைக்கு அபாயகரமான நிலையை எட்டியதா தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்தோனேசியாவின் சுலாவேசித் தீவிற்கு அருகே உள்ள ருவாங் எரிமலை ஏப்ரல் 30ஆம் திகதி மீண்டும் வெடித்து சிதற ஆரம்பித்தது.
இதன்காரணமாக அண்மையில் சுமார் 12,000 க்கும் மேற்பட்ட மக்கள் குறித்தப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.