ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்டவர்கள் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன், கிழக்கு அஜர்பைஜான் ஆளுநர் மாலேக் ரஹ்மதி, கிழக்கு அஜர்பைஜானுக்கான ஈரானிய ஜனாதிபதியின் பிரதிநிதி அயதுல்லா முகமது அலி அலே-ஹஷேம் ஆகியோர் இந்த விபத்தில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஹெலிகாப்டர் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் விபத்தை சந்தித்ததாகவும், “விபத்து நடந்த இடத்தை அடைய மீட்புக் குழுக்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று ஹெலிகாப்டர்கள் பயணித்ததாகவும், அதில் இரண்டு ஹெலிகாப்டர்கள் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாகவும், எனிவும் ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுங்குன் என்ற செப்புச் சுரங்கத்திற்கு அருகில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தின் போது உயிரிழப்புகள், அல்லது சம்பவத்திற்கான சரியான காரணம் மற்றும் விவரங்கள் இன்னும் அறியப்படவில்லை என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.