கிளிநொச்சியில் சிரட்டையில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை பருகிய இராணுவம்

கிளிநொச்சியில், இலங்கை இராணுவத்தினருக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில், பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

வீதியில் பயணித்த பொது மக்களுக்கு மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

இதன்போதே, வீதியில் பயணித்த இராணுவத்தினரும் முள்ளிவாய்க்கால் கஞ்சியினை சிரட்டையில் பெற்று பருகியுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு, இன்றைய தினமும் யாழ். உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சி விநியோகிக்கும் நிகழ்வு மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

மன்னார்-நானாட்டான் பேருந்து நிலையத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சாள்ஸ் நிர்மலநாதனின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரும் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர் நீத்தோருக்காக அஞ்சலிலும் செலுத்தப்பட்டது.

மழைக்கு மத்தியில் இடம்பெற்ற நிகழ்வில், மத தலைவர்கள், இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Recommended For You

About the Author: admin