“ஓய்வுக்குப் பிறகு சில காலம் என்னைப் பார்க்க முடியாது“: விராட் கோலி

ஐபில் 2024 போட்டித் தொடரில் 661 ஓட்டங்களைக் குவித்து அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்களின் வரிசையில் முதலிடத்தில் உள்ளார் விராட் கோலி.

இந்நிலையில் ஆர்சிபி அணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில், “நவீன சூழலுக்கு ஏற்ப கிரிக்கெட்டில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், உங்களை வேட்கையோடு வைத்திருப்பது எது?” என்ற கேள்வி விராட் கோலியிடம் கேட்கப்பட்டது.

அதற்கு விராட் கோலி இவ்வாறு பதிலளித்துள்ளார்.

“எல்லா விளையாட்டு வீரர்களுக்கும் அவர்களது கிரிக்கெட் வாழ்க்கையில் முடிவு என்பது இருக்கும். அதை நினைவில் வைத்துதான் நான் செயல்படுகின்றேன்.

விளையாடுகின்ற காலம் வரையில் எனது முழு பலத்தையும் ஆட்டத்தில் வெளிப்படுத்துவேன். ஓய்வை அறிவித்த பிறகு சில காலம் என்னைப் பார்க்க முடியாது” என பதிலளித்துள்ளார்.

2008ஆம் ஆண்டு முதலே சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்தியா சார்பாக விளையாடியதுடன் அணித் தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.

இவர் டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 என 522 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 26,733 ஓட்டங்கள் குவித்ததோடு, 80 சதங்களையும் பதிவு செய்துள்ளார்.

Recommended For You

About the Author: admin