2023ஆம் ஆண்டுக்குரிய 2024 மே மாதம் க.பொ.த (சாதாரணதர) பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்காக, அப்பரீட்சை முடிந்தவுடன் க.பொ.த (உயர்தர) வகுப்புக்களை ஆரம்பிப்பதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
உயர்தர பாட விதானங்களை முறையாக கற்பிக்கம் காலம் போதுமானதான அமையும் வகையில், சாதாரண தர பரீட்சை முடிந்தவுடன் உயர்தர வகுப்புகளுக்கு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
கல்விப் பொதுத்தராதர (சாதாரணதர) பரீட்சை முடிந்தவுடன் அதன் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு பரீட்சைகள் திணைக்களத்துக்கு குறைந்தது மூன்று மாதங்கள் தேவையாகும்.
இக்காலப்பகுதியில் மாணவர்கள் பாடசாலைக் கல்வியிலிருந்து விலகியிருப்பதால், அவர்கள் கல்வி பொதுத்தராதர உயர்தரத்தை பயில்வதற்கான போக்குகள் குறைவடைவதால் பல்வேறு சமூகப் பிரச்சினைகள் உருவாவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.
இவ்விடயத்தைக் கருத்தில் கொண்டு மாணவர்களுடைய நேரத்தை பயனுள்ளவாறு முகாமைத்துவப்படுத்துவதற்கும் க.பொ.த (உயர்தர) பாடவிதானங்களை உள்ளடக்குவதற்காக ஆசிரியர்களுக்கு போதியளவு நேரத்தை ஒதுக்கி வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் 2024 ஆம் ஆண்டில் சாதாரண பரிட்சை பூர்த்தியானதுடன் பாடசாலைகளில் உயர்கல்வி கற்கை நடவடிக்கைகளை ஆரம்பிப்பது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை தற்போது நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.