வாட்ஸ் அப் ப்ரொபைலை யாரும் ஸ்க்ரீன் ஷொட் எடுக்க முடியாது: புது அப்டேட்

உலகளாவிய ரீதியில் 200 கோடிக்கும் அதிகமானோர் உபயோகிக்கும் செயலியாக வாட்ஸ் அப் உள்ளது.

குறுஞ்செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள், ஆடியோக்கள் என பாடசாலை முதற்கொண்டு அலுவலக வேலை வரையில் அனைத்துக்கும் வாட்ஸ் அப் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

இந்நிலையில் பயனர்களின் அதீத பாதுகாப்புக் கருதி எதிர்வரும் காலத்தில் புது அப்டேட்டை செய்யவிருக்கிறது வாட்ஸ் அப்.

அது என்னவென்றால், இனி உங்க்ள் வாட்ஸ்அப் ப்ரொபைல்லை யாரும் ஸ்க்ரீன் ஷொட் எடுக்க முடியாது.

இந்த அம்சத்தில் உங்கள் முகப்பு புகைப்படத்தை யாரேனும் ஸ்க்ரீன் ஷொட் எடுக்க முனைந்தால் உடனே ஒரு நோட்டிபிகெஷன் வரும்.

ஐபோன் பாவனையாளர்களுக்கு போனை அப்டேட் செய்வதன் மூலம் இந்த வசதி பெறப்படுகிறது. இனிவரும் காலங்களில் ஆண்ட்ராய்ட் பாவனையாளர்களுக்கும் இந்த வசதி அறிமுகம் செய்யப்படும்.

Recommended For You

About the Author: admin