இரட்டைக் குடியுரிமை : தேர்தல்கள் ஆணைக்குழு பதில்

எந்தவொரு தேர்தலுக்கும் வேட்புமனு தாக்கல் செய்யும் நபர்களின் இரட்டைக் குடியுரிமை குறித்து விசாரணை நடத்தும் திறன் தனது ஆணையத்திற்கு இல்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட ஒருவர் தேர்தலில் போட்டியிட்டால் அவர்களுக்கு எதிராக எந்தவொரு நபரும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என அதன் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

அந்தந்த தேர்தல்களுக்குரிய சட்டங்களுக்கு ஏற்ப நடவடிக்கை மேற்கொள்ள மாத்திரமே எங்களால் முடியும். சட்டங்களை மீறி எங்களால் எதுவும் செயற்பட முடியாது.

குறித்த ஒரு நாளிலேயே வேட்புமனு தாக்கல் செய்ய வழங்கப்படுகின்றது. இந்த குறுகிய காலப்பகுதிக்குள் இவ்வாறான விசாரணைகளை மேற்கோள்ள முடியாது, அதற்கான திறனும் எங்களிடம் இல்லை என சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பாக அண்மையில் வெளியிடப்பட்ட அறிவிப்புத் தொடர்பிலும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கருத்து வெளியிட்டார்.

ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையும் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுவது அவசியம். தேர்தல் தொடர்பிலான கேள்விகள் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருவதால் அரசியலமைப்பின்படி, தேர்தலை நடத்துவோம் என்ற ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆகவே, எதிர்வரும் ஜூலை மாதம் 17 ஆம் திகதிக்கு பின்னர் தேர்தல் தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்புகளை எதிர்ப்பார்க்கலாம் எனவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய குடியுரிமையைக் கொண்டுள்ள காரணத்தினால் அண்மையில் டயானா கமகேவுக்கு பதவி பறி போனது.

இந்த சம்பவத்தின் பின்னர், இரட்டைக் குடியுரிமைக் தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது.

இதேவேளை, வேட்புமனுவைத் தாக்கல் செய்யும் ஒருவரின் குடியுரிமைத் தொடர்பில் பரிசீலிக்காதது ஏன் என்பது தொடர்பிலும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.

அதற்கு பதிலளிக்கும் வகையில் இரட்டைக் குடியுரிமை குறித்து விசாரணை நடத்தும் திறன் இல்லை என தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin