அரசால் வழங்கப்பட்ட இலவச அரிசியை சாப்பிட்டு பறிபோன ஏழு உயிர்கள்

அரசாங்கத்தால் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட இலவச அரிசியை சாப்பிட்ட ஏழு கோழிகள் உயிரிழந்த சம்பவம் பனகமுவ – ரிதிகம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான நிபுணர் அறிக்கையையும் ரம்பதகல்ல நீதவான் நீதிமன்றம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குருநாகல் மாவட்டத்தில் பனகமுவ பிரதேசத்தில் உள்ள குறைந்த வருமானம் பெரும் ஒருவர் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட இலவச அரிசியை அண்மையில் பெற்றுக்கொண்டுள்ளார்.

அந்த அரிசியில் சிறிதளவு எடுத்து அவர் வீட்டில் வளர்க்கும் கோழிகளுக்கு தீவணமாக கொடுத்துள்ளார்.

சிறிது நேரத்தில் கோழிகள் மயக்கநிலைக்கு சென்றதுடன், ஒன்றொன்றாக உயிரிழந்துள்ளது.

இதை அவதானித்த குறித்த நபர், அப்பகுதி சுகாதார பரிசோதகர்களிடம் முறைப்பாடொன்றை முன்வைத்ததையடுத்து, மேலதிக விசாரணைகள் முன்னெடுத்தனர்.

இதனடிப்படையில், கோழிகள் உயிரிழப்புக்கு சரியான காரணம் தெரியவராத நிலையில் நீதிமன்றத்தில் நிபுணர் அறிக்கை கோரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin