சைந்தவி- ஜி.வி. பிரகாஷ் விவாகரத்து

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் 11 வருட காதல் திருமண வாழ்க்கையை திடீரென முறித்துக் கொள்வதாக நேற்று அறிவித்துர் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளனர்.

இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பன்முக திறமை கொண்ட ஜி.வி.பிரகாஷ் வயலின் கலைஞர் சைந்தவியை காதலித்து கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு 2020ஆம் ஆண்டு அன்வி என்ற மகளும் உள்ளார். இந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் பிரிவதாக அறிவித்துள்ளனர்.

ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி வெளியிட்டுள்ள அறிக்கையில் Mental Peace வேண்டும் என்பதற்காகவே இருவரும் விவாகரத்து செய்து பிரியப் போவதாக தெரிவித்துள்ளனர்.

திருமணமாகி 11 ஆண்டுகள் ஆனாலும், குழந்தை பிறந்து சுமார் 3 ஆண்டுகளில் இருவரும் இப்படியொரு முடிவெடுக்க என்ன காரணம் என்று அவர்கள் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.

இது சினி உலகில் மட்டும் இல்லை, ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: admin