இந்தியாவில் நான்காம் கட்ட தேர்தல்

இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் இடம்பெற்று வரும் நிலையில் நான்காம் கட்ட தேர்தல் இன்று திங்கட்கிழமை (13) நடைபெறவுள்ளது.

ஆந்திரா, தெலுங்கானா, உத்தரபிரதேச, மராட்டி, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட்,ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் 96 தொகுதிகளில் வாக்குப்பதிவுகள் இடம்பெறவுள்ளன.இந்த தேர்தலில் 170 பெண்கள் உட்பட மொத்தம் 1,717 வேட்பாளர்கள் போட்டி யிடுகின்றனர்.

வாக்குப்பகுதிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் தயார் நிலையில் வைத்துள்ளதாக இந்திய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேலும் அனைத்து வாக்கச்சாவடியிலும் பாதுகாப்பு பலத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நான்காம் கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்ததையடுத்து குஜராத் மாநிலம் சூரத் தொகுதியை தவிர்த்து தேர்தல் இடம்பெறும் 542 தொகுதிகளில் 379 தொகுதிகளில் இன்றுடன் வாக்குப் பதிவுகள் நிறைவடைகின்றன.

இதன்பின்னர் 163 தொகுதிகளில் மாத்திரமே வாக்குப்பதிவுகள் இடம்பெறவுள்ளன.

எதிர்வரும் 20 ஆம் திகதியன்று 49 தொகுதிகளிலும் 25 ஆம் திகதியன்று 57 தொகுதிகளிலும் வாக்குப்பதிவுகள் இடம்பெறவுள்ளதுடன் ஜூன் மாதம் முதலாம் திகதியன்று 57 தொகுதிகளில் தேர்தல் வாக்குப்பதிவுகள் இடம்பெற்றதையடுத்து ஜூன் மாதம் 04 ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை,முதற் கட்டமாக தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது.

கடந்த மாதம் 26 ஆம் திகதி 02 ஆம் கட்டமாக கேரளா உட்பட 12 மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் தேர்தல் இடம்பெற்றது.

இதனையடுத்து கடந்த 07 ஆம் திகதி 03 ஆம் கட்டமாக குஜராத், கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin