சுகவீன விடுமுறை அறிவித்து 300 இற்கும் மேற்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன பணியாளர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக அந்த நிறுவனத்தின் விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.மேலும் 80 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த பணியாளர்களை தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும் தொடர்புகொள்ள முடியவில்லையென ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கவலை வெளியிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
”தொழில் நிமித்தம் கொண்டுவரப்பட்ட புதிய விதிமுறை மற்றும் மாற்றங்கள் பணியாளர்களின் பணிபகிஷ்கரிப்பிற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிறுவனத்தை 2021 ஆம் ஆண்டு முதல் டாடா குழுமம் நிர்வகித்து வருகின்றது. ஏர் இந்தியாவின் ஒரு பிரிவாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செயற்பட்டு வருகிறது.
பணியாளர்கள் சுகவீன விடுமுறை அறிவித்து பணிக்கு சமூகமளிக்கவில்லை. இதன் காரணமாக நேற்றிரவு முதல் நாம் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறோம்.
இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண முயற்சித்து வருகின்றோம்.பயணிகளின் சிரமத்திற்கும் வருந்துகிறோம்” என கூறியுள்ளார்.
அவர்களை நடாத்தும் முறைமையில் சமத்துவமின்மை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்களை பணியாளர்கள் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கடுகின்றது.