“டுப்பு டுப்புனு சுடுறீனங்களா? உண்மையான துவக்கா” பரிதாப நிலையில் இரணுவ வீரர்

இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து பகுதியளவில் விடுவிக்கப்பட்ட பகுதிக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் கடமையில் நின்ற இராணுவ வீரர் ஒருவரை கிண்டலடித்து காணொளி எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

இது குறித்த காணொளி சமூக ஊடகங்களில் பரவிய நிலையில் யூட்டிபருக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றது.

பலாலி வடக்கு பகுதியில் பகுதியளவில் விடுவிக்கப்பட்ட பகுதிக்குள் நுழைந்த இளைஞரொருவர் இராணுவ முகாமில் கடமையில் நின்ற இராணுவ வீரரை காணொளி எடுத்ததோடு “டுப்பு டுப்புனு சுடுறீனங்களா? உண்மையான துவக்கா” என கிண்டலடித்துள்ளார்.

கடமையில் இருக்கும் ஒரு இராணுவ வீரரை கிண்டலடித்து சமூக ஊடகத்தில் பகிர்ந்தமை தொடர்பில் பலரும் தமது விமர்சனங்களை தெரிவித்துவருகின்றனர்.

இவ்வாறு பல யூட்டிபஸ் சட்ட வரையறைகளை மீறி பல இடங்களுக்குள் அத்துமீறி சட்டவிரோதமாக உள்நுழைவது தொடர்பில் உரியவர்கள் கவனம் எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காணொளி வெளியிட்ட நபர் யூட்டிபில் இருந்து அந்த காணொளியை நீக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin