காசாவிலிருந்து இஸ்ரேல் பாதுகாப்பு படையினரை வெளியேற்றுவதற்கு பதிலாக சிறைப்பிடிக்கப்பட்ட பணயக்கைதிகள் விடுவிப்பதற்கான இஸ்ரேலின் கோரிக்கையை ஹமாஸ் ஏற்றுக்கொண்டுள்ளது.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஆரம்பமான இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தற்போது வரை நீடித்து வருகின்றது.
ஹமாஸால் இஸ்ரேலியர்கள் பலர் பணயக் கைதிகளாாக சிறைப்பிடிக்கப்பட்டனர். எவ்வாறாயினும் போர்நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் சிலரை மீட்கப்பட்டனர்.
இஸ்ரேலின் தாக்குதலை இடைநிறுத்துவது தொடர்பாக எகிப்து மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் கெய்ரோவில் பேச்சுவார்த்தைகளை நேற்று முன் தினம்ஆரம்பித்தனர்.
இதன்பேது 7 மாத கால போரை நிறைவுக்க கொண்டு வருவதற்கான ஒப்பந்தமொன்றை எகிப்து மற்றும் கத்தார் நாடுகள் இணைந்து முன்மொழிந்தன.
இதனை ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஏற்று கொண்டுள்ளதுடன் போர்நிறுத்தத்திற்கு தயார் எனவும் தெரிவித்துள்ளது.
இந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தில் உள்ள விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.