சவுக்கு சங்கரை 05 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதியளிக்குமாறு சைபர் கிரைம் பொலிஸார் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
பிரபல யுடியூபர் சவுக்கு சங்கர், தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாகக் கருத்து தெரிவித்த குற்றச்சாட்டில் நேற்று முன்தினம் (06) தேனியில் கைது செய்யப்பட்டு கோவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து, சவுக்கு சங்கர் காரிலிருந்து அரை கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகக் கூறி சங்கர் மற்றும் அவரது உதவியாளர்கள் இருவர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இதன்பின்னர் சவுக்கு சங்கரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை, 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைப்பதற்கு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், சவுக்கு சங்கரை 05 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதியளிக்குமாறு சைபர் கிரைம் பொலிஸார் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
பெண் காவலர்கள் தொடர்பில் அவதூறாகக் கருத்து தெரிவித்தமை குறித்து மேலதிக விசாரணை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக பொலிஸார் தரப்பில் கூறப்படுகிறது.
கோவை சைபர் கிரைம் போலீசார் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், நாளை செவ்வாய்க்கிழமை (07) மனு மீதான விசாரணை எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.