எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்துக்கான அமெரிக்க அணியில் நியூசிலாந்து முன்னாள் சகலதுறை வீரர் கோரி ஆண்டர்சன் இடம்பிடித்துள்ளார்.
33 வயதான கோரி ஆண்டர்சன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த பின்னர், கடந்த மாதம் இடம்பெற்ற போட்டியொன்றின் மூலம் அமெரிக்க அணியிணை பிரதிநிதித்துப்படுத்தினார்.
கோரி ஆண்டர்சன் 2012 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நியூசிலாந்துக்காக 93 முறை விளையாடியுள்ளார், இதில் மூன்று உலகக் கிண்ணங்களும் அடங்கும்.
இந்நிலையில், எதிர்வரும் T20 உலகக் கிண்ண தொடரில் அவர் அமெரிக்கா அணியில் விளையாடவுள்ளார்.
அதேபோல் அமெரிக்க அணியில் இடம்பிடித்துள்ள நிதிஷ் குமார், இந்த ஆண்டு அமெரிக்காவில் அறிமுகமானதற்கு முன்பு கனடாவுக்காக 18 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
உலகக் கிண்ண தொடரில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து மற்றும் கனடாவுடன் அமெரிக்கா ஒரு குழுவில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அணி விபரம்
மோனாங்க் படேல் (தலைவர்), ஆரோன் ஜோன்ஸ் (துணை கேப்டன்), ஸ்டீவன் டெய்லர், கோரி ஆண்டர்சன், சவுரப் நேத்ரவல்கர், ஜெஸ்ஸி சிங், ஹர்மீத் சிங், நோஷ்துஷ் கென்ஜிகே, ஷாட்லி வான் ஷால்க்விக், நிதிஷ் குமார், ஆண்ட்ரீஸ் கவுஸ், ஷயான் ஜஹாங்கீர், அலி கான், நிசார்க் படேல் , மிலிந்த் குமார். Reserves: கஜானந்த் சிங், ஜுவானோய் ட்ரைஸ்டேல், யாசிர் முகமது.