சீரற்ற காலநிலையால் அவதியுறும் பிரேசில் மக்கள்

பிரேசிலில் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 70 இற்கும் மேற்பட்டோர் காணாமற் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஒருவார காலமாக புயல் ஆரம்பமானதிலிருந்து இருந்து சுமதர் 25,000 பேர் குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல லட்சம் மக்கள் மின் மற்றும் நீரின்றி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புயல் தாக்கம் காரணமாக பிரேசிலில் 497 நகரங்கள் பாரியளவில் சேதமடைந்துள்ளதாகவம் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பென்டோ கோன்சால்வ்ஸ் நகருக்கு அருகே நீர்மின் அணை இடிந்து விழுந்ததில் 30 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் நீர்மட்டம் உயர்வடைந்து வரும் நிலையில் அதே பகுதியில் அமையப்பெற்றுள்ள மற்றுமொரு அணையும் இடிந்து விழும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin