பால்வெளியில் உள்ள இலட்சக்கணக்கான கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கின்றதா எனும் ஆராய்ச்சி தொடர்ந்து நடந்த வண்ணமே உள்ளது.
இதன்படி ஐரோப்பிய நாடுகளில் அடிக்கடி பறக்கும் தட்டுக்களைப் பார்த்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்ற நிலையில், இந்த பறக்கும் தட்டுக்கள் எங்கிருந்து வருகின்றன என்பது குறித்த ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன.
இவ்வாறிருக்க, ‘சைக் 16’ என்ற விண்கலமானது கடந்த 201ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு, செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய கிரகங்களுக்கிடையில் நிலைநிறுத்தி, ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.
டீப் ஸ்பேஸ் ஆப்டிகள் கம்யூனிகேஷன்ஸ் பொருத்தப்பட்டிருப்பதால் இந்த சைக் விண்கலத்தின் மூலம் லேசர் தகவல் பரிமாற்றத்தை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
இதன்படி சைக் விண்கலத்தில் அனுப்பப்பட்டலேசர் சமிக்ஞையானது வெற்றிகரமாக பூமிக்கு வந்துள்ளது.
பூமியிலிருந்து 14 கோடி மைல்கள் தொலைவிலிருந்து இந்த லேசர் சிக்னல் வந்திருப்பதாக தெரிகிறது.