பாரிய அளவில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் வர்த்தகத்தில் புதியவர்கள் பலர் இணைந்துள்ளதாக பொலிஸ் புலனாய்வு அமைப்புகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் மூலம் அதிகளவு சொத்துக்களை ஈட்ட முடியும் என்ற நிலைப்பாட்டில், இந்த மோசடியில் புதிய கடத்தல்காரர்கள் இணைந்துள்ளதாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், அண்மையில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கைகளின் போது போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் புதிய கடத்தல்காரர்களை கைது செய்வது இலகுவான காரியமல்ல என விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சமீபகாலமாக இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் குறித்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவிலோ, பொலிஸாரிடம் எந்தத் தகவலும் இல்லாததால், சோதனையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதன்மூலம், புதிய வர்த்தகர்கள் சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பிலும், உள்நாட்டு முக்கிய போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளிலும் இணைந்துள்ளனர்.
இந்த கடத்தல்காரர்களில் பெரும்பாலானோர் துபாயில் சொகுசுவாழ்க்கை வாழ்ந்து கொண்டு கடத்தலில் ஈடுபட்டு வருவதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்ட பெரும்பாலான கடத்தல்காரர்கள் புதிய கடத்தல்காரர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.