இந்திய அணியில் இடம்பிடித்த சிவகார்த்திகேயன் பட நடிகை

வங்கதேச அணிக்கு எதிராக நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது (T20) தொடருக்கான இந்திய அணியில் கனா திரைப்படத்தில் நடித்த வீராங்கனை சஜீவன் சஜனா இடம்பிடித்துள்ளார்.

வருகின்ற ஏப்ரல் 28ம் திகதி தொடங்கும் வங்கதேச சுற்றுப்பயணத்திற்கான 16 வீராங்கனைகள் கொண்ட இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது.

இதில், கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக்கில் சிறப்பாக செயல்பட்ட சஜீவன் சஜனா மற்றும் ஆஷா சோபனா ஆகியோர் இந்திய அணிக்காக தங்களது முதல் அழைப்பை பெற்றுள்ளனர்.

லெக் ஸ்பின்னரான ஆஷா சோபனா, கடந்த மகளிர் பிரீமியர் லீக்கில் கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடினார்.

மேலும், நடத்து முடிந்த மகளிர் பிரீமியர் லீக்கில் அதிக விக்கெட்கள் எடுத்த வீராங்கனைகள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்திருந்தார்.

j,h,j

Sajeevan Sajana

அதேபோல், மற்றொரு ஆர்சிபி வீராங்கனை ஸ்ரேயங்கா பாட்டீலும், குஜராத் அணியின் இடம்பெற்றிருந்த தயாளன் ஹேமலதாவும் இடம் பிடித்துள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய சஜீவன் சஜனா, மகளிர் பிரீமியர் லீக்கில் டெல்லி அணிக்கு எதிராக 1 பந்துக்கு 5 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், களமிறங்கி முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து தனது அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.

அந்த காணொளி இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. இதுபோக, புனேவில் சமீபத்தில் முடிவடைந்த இண்டர்-மண்டல ரெட்-பால் போட்டியில் அரையிறுதியில் 74 ஓட்டங்களை குவித்திருந்தார். இதையடுத்து, இவரை இந்திய அணி முதல் முறையாக விளையாட அழைப்புவிடுத்துள்ளது.

சஜீவன் சஜனா, அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான கனா படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த சஜீவன் சஜனா?

கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள மானந்தவாடியைச் சேர்ந்த சஜீவன் சஜனா சகலத்துரை ஆட்ட வீராங்கனையாக திகழ்கின்றார்.

கடந்த 2023 மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் எந்த அணியும் இவரை எடுக்க முன்வரவில்லை.

அதன்பிறகு, 2024 ஏலத்தில் ரூ. 10 இட்சத்திற்கு மும்பை அணியால் வாங்கப்பட்டார். சஜனாவின் தந்தை சஜீவன் ஒரு முச்சக்கரவண்டி ஓட்டுநராக உள்ளார்.

k;'

Sajeevan Sajana

கேரளாவின் வயநாட்டில் உள்ள பழங்குடி சமூகமான குறிச்சியா பழங்குடியினத்தைச் சேர்ந்த சஜனா, இரண்டு முறை கேரளாவின் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த 2015 மற்றும் 2017ம் ஆண்டுகளில் இந்த விருதைப் பெற்றுள்ளார்.

கடந்த 2023 சீனியர் மகளிர் இருபதுக்கு இருபது(T20) டிராபி 2023ல், அவர் ஏழு இன்னிங்ஸ்களில் 134 ஓட்டங்களை குவித்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில்,வங்கதேச அணிக்கு எதிராக நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது(T20) தொடருக்காக முதல் முறை இந்திய அணிக்காக களமிறங்கவுள்ளார்.

வீராங்கனை சஜீவன் சஜனா இன்னும் பல சாதனைகளை குவிக்க வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.

Recommended For You

About the Author: admin