செவ்வாய்க் கிரக ஆய்வு பணியில் இலங்கை வம்சாவளி விஞ்ஞானி: நாசா

செவ்வாய் கிரகம் தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள ஆய்வுப் பணிகளுக்காக நாசா விண்வெளி ஆய்வு மையத்தால் தெரிவுசெய்யப்பட்டுள்ள குழுவில் இலங்கை விஞ்ஞானி கலாநிதி பியுமி விஜேசேகர இடம்பெற்றுள்ளார்.

நான்கு பேர் கொண்ட குழுவில் அவரும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

ஹூஸ்டனில் உள்ள ஜோன்சன் விண்வெளி மையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள உருவகப்படுத்தப்பட்ட செவ்வாய் கிரக பயணத்திற்காக நாசாவால் நான்கு பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த பணிக்காக, பியுமி விஜேசேகர உள்ளிட்ட குழுவினர் மே 10 ஆம் திகதி “மனித ஆய்வு ஆராய்ச்சி அனலாக்” பணி பகுதிக்குள் நுழைய திட்டமிட்டுள்ளனர்.

சுமார் 45 நாட்கள் அவர்கள் அங்கு தங்கியிருப்பார்கள் எனவும், ஜூன் 24 ஆம் திகதி குழுவினர் பூமிக்கு திரும்புவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு சென்றதும், குழுவினர் சுமார் 45 நாட்கள் செவ்வாய் கிரக சூழலில் தமது பொழுதை செலவிடுவார்கள்.

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நடப்பது முதல் ரெட் பிளானட் அனுபவங்கள் வரையான அறிவியல் ஆராய்ச்சி மற்றும் செயல்பாட்டு பணிகளை மேற்கொள்ள விர்ச்சுவல் ரியாலிட்டியைப் குழுவினர் பயன்படுத்துவார்கள்.

அத்துடன், விண்வெளி வீரர்களை சந்திரன், செவ்வாய் மற்றும் விண்வெளியின் பிற பகுதிகளுக்கு அனுப்புவதற்கு முன், அவர்களுக்கு தேவையான பூர்வாங்க பயிற்சி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கலிபோர்னியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள நாசா அமெஸ் ஆராய்ச்சி மையத்தில் உள்ள கதிர்வீச்சு உயிரியல் இயற்பியல் ஆய்வகத்தில் முதுகலை ஆராய்ச்சி விஞ்ஞானியாக பியுமி விஜேசேகர பணிபுரிகிறார்.

பியுமி விஜேசேகர, சான் டியாகோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உயிரி பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.

அவர் பிட்ஸ்பர்க், பென்னில் உள்ள கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் உயிரியல் மருத்துவப் பொறியியலில் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களையும் பெற்றுள்ளார்.

அவரது முனைவர் பட்ட ஆராய்ச்சியானது ஸ்டெம் செல் மற்றும் உறுப்புப் பொறியியல் பற்றிய ஆய்வாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin