எதிர்வரும் T20 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியின் போது இந்திய அணி சார்பில் விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மா ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் முற்பகுதியில் T20 உலகக் கிண்ணம் ஆரம்பமாகவுள்ளது. இதில் 20 அணிகள் பங்குபெறவுள்ளன.
தற்போது இடம்பெற்று வரும் ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் T20 உலகக் கிண்ணம் இடம்பெறவுள்ளது.
15 பேர் கொண்ட இந்திய அணியில் யார்? யார்? இடம்பெறுவார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தற்போதைய நிலையில், ரோகித் ஷர்மா அணியின் தலைவராக செயற்படுவார் என்பது உறுதியாகியுள்ளது. ஏனைய வீரர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையிலேயே, இந்திய அணி சார்பில் விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மா ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர்கள் வரிசையில் விராட் கோலி முதலிடத்தில் இருக்கின்றார்.
இதுவரை விளையாடியுள்ள போட்டிகளில் இரண்டு அரைச்சதம் மற்றும் ஒரு சதம் உள்ளடங்களாக அவர் 361 ஓட்டங்களை குவித்துள்ளார்.
ரோகித் ஷர்மாவும் சிறந்த முறையில் தனது துடுப்பாட்ட திறனை வெளிப்படுத்தி வருகின்றார்.
இந்நிலையில் இருவரையும் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறக்க அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு தீவிரமாக பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரிதும் எதிர்ப்பார்க்கட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில் ஆகியோர் இந்த ஐபிஎல் தொடரில் பிரகாசிக்கவில்லை.
இதனால் கோலி மற்றும் ஷர்மா ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.