தமிழகத்தின் திருச்சி மத்திய சிறைச்சாலையில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் 116 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சிறப்பு முகாமில் போதைபொருள் கடத்தல் மற்றும் தங்கம் கடத்தல் வழக்குகள் தொடர்புடையதாக என்ஐஏ அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 19ம் திகதியன்று சிறப்பு முகாமில் செல்போன் பயன்பாடு அதிகரிப்பால் சிறையில் இருந்தபடியே குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதாக எழுந்த புகார் எழுந்தது.
இதனைடுத்து அதிகாரிகள் சோதனை நடத்தியதில் 154 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனிடையே பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை தங்களிடம் மீண்டும் ஒப்படைக்க வலியுறுத்தி சந்தேகபர்கள் போராட்டம் நடத்தி இருந்தனர்.
சுவர்மீது ஏறி போராட்டம்
இந்த நிலையில் ,நேற்றைய தினம் இரவு 13 இலங்கை தமிழர்கள் சிறப்பு முகாம் வளாகத்தில் மரம் மற்றும் சுவர்மீது ஏறி நின்று பறிமுதல் செய்த செல்போன்களை திரும்பி வழங்க வேண்டும், விரைவில் விடுதலையாகப் போகும் செய்தியை குடும்பத்தினருக்கு தெரிவிக்க வேண்டும், எங்களது குடும்பத்தினருடன் பேச அனுமதிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் காவல்துறையிர் ஈடுபட்டநிலையில் இதனை செய்தி எடுக்கச் சென்ற பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையினரை செய்தி எடுத்தாலும், அவர்கள் கூறியதை பதிவு செய்து வெளியிட்டாலும் தங்கள் மீது தனி நபர் வழக்கு பதிவு செய்வேன் என காவல் ஆய்வாளர் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகின்றது.
இதை அடுத்து, பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையினர் அங்கு குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாகவும் தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.