உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் தாமதம் காரணமாக கிட்டத்தட்ட 200 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு 529 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவீனமாக மதிப்பிடப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்திற்கு 2008 ஆம் ஆண்டு அமைச்சரவை அனுமதியளித்ததையடுத்து 2010 ஆம் ஆண்டில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
தற்போது உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் இம்மாதம் 24 ஆம் திகதி அல்லது 25 ஆம் திகதிகளில் மக்களிடம்
கையளிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.
ஈரான் அரசின் அனுசரணையுடன் திறப்பு விழா இடம்பெறவுள்ளதுடன் இதன்போது ஈரான் ஜனாதிபதி பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான நடவடிக்கைகளை வெளிவிவகார அமைச்சு மேற்கொண்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார் இந்தத் திட்டத்தின் மூலம் 120 மெகாவாட் நீர் மின்சாரம் தேசிய அமைப்பில் இணைக்கப்படவுள்ளது.