நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள விவகாரம் நேற்று முதல் சினிமா உலகை சலசலக்க வைத்துள்ளது.
நடிகர் தனுஷ் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை பிரிவில் இருந்தது.
விவாகரத்து கோரி நீதிமன்றம்
அதனையடுத்து அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க இரண்டு குடும்பத்தினரும் முயற்சிகள் செய்ததாக கூறப்பட்டது.
ஆனால் சட்டப்பூர்வமாக விவாகரத்து வழங்க வேண்டும் என்று தனுஷும், ஐஸ்வர்யாவும் நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருக்கின்றனர்.
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான தனுஷ் பல விமர்சனங்களை கடந்து இன்று மிகச்சிறந்த நடிகராக ஹொலிவுட்வரை சென்றிருக்கிறார்.
அவரது நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது.
ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் படத்தை இயக்கியிருந்தார். தனுஷ் இப்படி நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் ஜொலித்துவருகிறார்.
தனுஷை போல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் இயக்குநராக இருக்கிறார்.
அசுர வளர்ச்சியில் தனுஷ்
3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் அடுத்ததாக வை ராஜா வை, லால் சலாம் ஆகிய படங்களை இயக்கினார். அவர் இயக்கத்தில் வெளியான அடுத்தடுத்த படங்கள் தோல்வியை தழுவியது.
இதற்கிடையே தற்போது மீண்டும் விவாகரத்து சர்ச்சை வெடித்திருக்கின்றது.
நடிகர் தனுஷ் கடந்த 2004ஆம் ஆண்டு ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சுமூகமாக போய்க்கொண்டிருந்த திருமண வாழ்க்கை சில வருடங்களுக்கு பிறகு பிரிவில் நின்றது.
இருவரும் பிரிந்தாலும் இதுவரை இரண்டு பேரும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை.
அவர்களை சேர்த்து வைக்க குடும்பத்தினர் முயன்று வந்த சூழலில் சட்டப்பூர்வமாக விவாகரத்து வேண்டுமென்று நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருக்கின்றனர்.
இதன் மூலம் அவர்கள் இரண்டு பேரும் மீண்டும் இணைவதற்கு வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது. இது சினிமா உலகிலும், தனுஷ் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது