தனிநபர் நிதி முறையில் மாற்றம்

அரசாங்கத்தில் நிலவும் நிதிப் பற்றாக்குறையை மட்டுப்படுத்துவதற்கு வேலையற்ற தனிநபர்களுக்கான ஆதரவு மறுசீரமைக்கப்பட வேண்டும் என பிரான்ஸின் பிரதமர் கேப்ரியல் அட்டல் தெரிவித்துள்ளார்.

இதன்படி, பிரான்ஸ் அரசாங்கம் வேலையற்ற தனிநபர்களுக்கு நிதி ரீதியாக ஆதரவளிக்கும் முறையை மாற்றுவதன் மூலம் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்புவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, பிரான்ஸில் தனிநபருக்கு வழங்கப்படும் நன்மைக்கு கொடுப்பனவுகளின் காலம் குறைக்கப்படலாமென தெரிவிக்கப்படுகிறது.

பிரான்ஸ் பொருளாதார ரீதியில் பின்னடைவை சந்தித்ததை அடுத்து பிரதமர் கேப்ரியல் அட்டல் தலைமையில் இந்த முயற்சி முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டில் பிரான்சின் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறை 5.5 வீதமாக அதிகரித்தது.

இதனைத் தொடர்ந்து வரிகளை அதிகரிக்க மாட்டோம் என பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்தது.

இந்த நிலையில், வரவு மற்றும் செலவுக்கு இடையிலான இடைவெளியை நிரப்புவதற்கு மாற்று வழிகளைத் தேடிவருகிறது.

இதன்படி, ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் பதவிக்காலத்தில் பிரான்ஸில் தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்படுகிறது.

2017 ஆம் ஆண்டு இம்மானுவேல் மக்ரோன் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பிரான்ஸின் வேலையின்மை அமைப்பில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளார்.

இதற்கமைய, பிரான்ஸில் வேலையற்றவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin