கடந்த 2017-18 முதல் 2020-21 வரை உள்ள வருமான வரி கணக்கை சுமார் 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததற்காக காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை ரூ. 250 கோடி அபராதம் விதித்தது.
இதனை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி யஷ்வந்த் வர்மா மற்றும் நீதிபதி புருஷைந்திர குமார் கவுரவ் அமர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில், 2017-18 முதல் 2020-21 வரை 4 ஆண்டுக்கான வருமான வரிக்கணக்கை முறையாக செலுத்தவில்லை என்றும், எனவே அபராதமாக ரூ. 1700 கோடி செலுத்துமாறு வருமான வரித்துறை காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.