வாட்ஸ் அப் மூலம் இனி பணம் அனுப்பலாம்

வாட்ஸ் அப் ஆனது தமது பயனர்களை கவரும் வகையில் புதுப்புது அப்டேட்களை கொண்டு வருகின்றது.

இந்நிலையில் தற்போது வாட்ஸ் அப் மூலமாக சர்வதேச யு.பி.ஐ. பேமண்ட்களை மேற்கொள்ளும் வசதியை இந்திய பயனர்களுக்கு வழங்குவதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றது.

இந்த வசதியானது International payments என்ற ஆப்ஷன் மூலம் வழங்கப்படவுள்ளது.

இந்த வசதியின் மூலம் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கும் இலகுவாக பணம் அனுப்பலாம்.

இப்போதைக்கு இந்த அம்சமானது, பீட்டா பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான மேலதிக அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Recommended For You

About the Author: admin